கோதுமை இட்லி
தேவையான பொருட்கள் :
கோதுமை - 300 கிராம் (தோலைக் குத்தி எடுக்கவும்)
உளுத்தம் பருப்பு - 75 கிராம்
செய்முறை :
கோதுமையை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஆட்ட வேண்டும். உளுத்தம் மாவையும் நன்றாக வெண்ணெய் போல் ஆட்டி உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். 8 மணி நேரம் வைத்த பின் இட்லியோ, தோசையோ சுடலாம்.
இதே போன்று தீட்டிய கம்பு, கேப்பைகளிலும் மாவு ஆட்டி இட்லி, தோசை போடலாம். இவை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். இவைகளுடன் காய்கறி சேர்த்தும் காய்கறி இட்லி தயார் செய்யலாம்.
No comments:
Post a Comment