Saturday, 22 April 2017

சீஸ் புலாவ்

சீஸ் புலாவ்
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
பல்லாரி - 2
பச்சை மிளகாய் -  4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 8
உப்பு - தேவையான அளவு
துருவிய சீஸ் - அரை கப்
எண்ணெய் - 2 மேஜைகரண்டி

செய்முறை:
            பாசுமதி அரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணையைக் காய வைத்து, மேற்கண்டவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிது உப்பு சேர்த்து இறக்குங்கள். மிக எளிமையாக செய்யக் கூடிய புலவு என்றாலும் சீஸ் சுவையுடன் பிரமாதமாக இருக்கும்.


No comments:

Post a Comment