Sunday, 30 April 2017

Javvarisi Payaasam - ஜவ்வரிசி பாயாசம்



ஜவ்வரிசி பாயாசம்
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 200 கிராம்
வெல்லம் - 250 கிராம்
தேங்காய் - 2 மூடி (துருவி பால் எடுக்கவும்)
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்

செய்முறை :
            அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும். ஜவ்வரிசி வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய் பாலை அதில் சேர்த்துக் கிளறவும்.
            நெய்யில் முந்திரி, ஏலக்காய் வறுத்து பாயசத்தில் போடவும். சூடாக பரிமாறவும்.

No comments:

Post a Comment