Sunday, 30 April 2017

Milagu Rasam - Pepper Dish - மிளகு ரசம்



மிளகு ரசம்
தேவையான பொருட்கள் :
 துவரம் பருப்பு - 25  கிராம்
 புளி - 15 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
கடலை எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை :
            துவரம் பருப்பை சுத்தம் செய்து 300 மில்லி தண்ணீரில் போட்டு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து பருப்பு வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.
            சீரகம், காய்ந்த மிளகாய்,மல்லி,துவரம் பருப்பு இவைகளை நீரில் விட்டு மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 100 மில்லி தண்ணீரில் புளியை கரைத்து சக்கையை எடுத்து விட வேண்டும்.
            500 மில்லி கொள்ளளவு உள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ளவைகளை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.ரசம் கொதி வந்ததும் ரசப்பொடி மற்றும் வேக வைத்த பருப்பு இவைகளை போட்டு மூன்று கொதி வரும் வரை வைத்திருந்து இறக்கி விட வண்டும். இறக்கும் சமயம் கொத்த மல்லித் தழைகளை போட வேண்டும்.
            வாணலியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்ததும் எண்ணையை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் இவைகளை வறுத்து ரசத்தில் கொட்டவும்.

No comments:

Post a Comment