Saturday, 22 April 2017

ஆப்பிள் அல்வா



 தேவையான பொருட்கள் :
ஆப்பிள் துருவியது : 200 கிராம்
கோதுமை மாவு : 200 கிராம்
நெய் - 100 மில்லி
ஏலத் தூள் - சிறிதளவு
சீனி - 400 கிராம்
பால் - 200 மில்லி
முந்திரி பருப்பு - சிறிதளவு
கேசரி பவுடர் – சிறிதளவு

செய்முறை :
            பாலில் ஆப்பிள் துருவியது போட்டு வேக விடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரிப் பவுடர் சேர்த்துக் கிளறவும். சீனியையும் கலந்து சற்று இறக்கியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும்.    
            அல்வா பதம் வந்ததும் முந்திரி பருப்பு, ஏலத் தூள் சேர்த்து இறக்கி விடவும். இது சுவையாக இருக்கும், உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது.

No comments:

Post a Comment