Sunday, 30 April 2017

வாழைக்காய் பொரியல்



வாழைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 2
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - தேவையான அளவு
செய்முறை :
            வாழைக்காயை தோல் சீவி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது புளித்த தயிரையும் கலந்து வைத்துக்கொண்டு அதில் வாழைக்காயை நீள வடிவமாகவோ அல்லது வட்ட வடிவமாகவோ அறிந்து போட வேண்டும்.
            மிளகாயையும், மிளகையும் மைய அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 100 அதில் மிளகு மற்றும் மிளகாய் அரைத்ததை போட்டு அதனுடன் சாம்பார் பொடியை போட்டு கலக்கி வாழைக்காயை எடுத்துப் போட்டு தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேக வைத்து பதம் வந்ததும் இறக்கி விட சுவையான வாழைக்காய் பொரியல் தயார் ஆகி விடும்.
 

Urualikilangu Dish - உருளைக்கிழங்கு மசாலா பொரியல்



உருளைக்கிழங்கு மசாலா பொரியல்
தேவையான பொருட்கள் :
 உருளைக்கிழங்கு - 200 கிராம்
 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 டால்டா - 300 கிராம்

செய்முறை :
            உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து தோல் சீவிய பின் நமக்கு தேவையான வடிவத்தில் அரிந்து தண்ணீரில் போட்டு நன்கு அலசிய பின் ஒரு துணியில் பரப்பி விட வேண்டும். இவ்வாறு செய்ய ஈரம் போய்விடும்.
            வாணலியை அடுப்பில் வைத்து நன்கு காய்ந்ததும் டால்டாவை போட்டு நன்கு காய்ச்சி காய்ந்ததும் துணியில் போட்ட உருளைக்கிழங்கு வில்லைகளை எடுத்து டால்டாவில் போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுத்து ஒரு தட்டில் பரப்பி வைக்க வேண்டும்.
            உருளைக்கிழங்கு வறுவல் சூடு மாறியதும் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு இவைகளை கலந்து தூவி சிறிது நேரம் கழித்து சாப்பிட வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.

Curd Dish - தயிர் வடை



தயிர் வடை
செய்முறை :
            உளுந்து வடை தயார் செய்யவும். பிறகு அதை வெந்நீரில் போட்டு உடனே எடுத்து தயிரில் போடவும்.

தயிருடன் சேர்க்க வேண்டியவை :
தயிர் - 200 கிராம்
தேங்காய் - கால் முடி
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
            தேங்காய்,பச்சை மிளகாய், உப்பு முதலியவற்றை மிக்சியில் அரைத்து தயிரில் கலக்கவும். அதனுடன் கடுகு தாளித்து கொட்டவும். தயிர் வடை 'ரெடி'.



Tomato Juice - தக்காளி ஜாம்



தக்காளி ஜாம்
தேவையான பொருட்கள் :
பெங்களூர் தக்காளி - 10
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை :
            தக்காளியை கேரட் துருவியால் மெல்ல துருவிக் கொள்ளவும். அடி கனமான கடாயில் துருவிய தக்காளி, சர்க்கரை சேர்த்து, அடுப்பில் சிறு தீயில் வைத்துக் கிளறவும். ஜாம் பதத்துக்கு வந்தவுடன் ஏலக்கைதூள் தூவி இறக்கி விட குழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி ஜாம் தயாராகி விடும்.

Palgova - Milk Sweet - பால் கோவா



பால் கோவா
தேவையான பொருட்கள் :
ஆவின் பால் - 1 லிட்டர்
நெய் - 2 தேக்கரண்டி
சீனி - 250 கிராம்

செய்முறை :
            கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு வற்ற காய்ச்சவும். பால் நன்கு கெட்டியாக வரும்போது சீனியைப் போட்டு சிறிது நேரம் கிளறி நெய் ஊற்றி திரண்டு வரும்போது இறக்கவும். சுவையான பால்கோவா ரெடி.

Nellikkai Patchadi - நெல்லிக்காய் பச்சடி



நெல்லிக்காய் பச்சடி
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடுகு,பெருங்காயத்தூள் - சிறிதளவு
தயிர் - 100 கிராம்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
            நெல்லிக்காய்களை துருவி.... இஞ்சி, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, பெருங்காயத்தூள், சேர்த்து தயிரில் கலக்கவும்.
எண்ணையில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். உடலுக்கு ஆரோக்கியமான நெல்லிக்காய் பச்சடி தயார்.